குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் மலேஷியா 2022

Hello!

Stay up to date with New Naratif’s latest stories and upcoming events with our weekly newsletter. No spam, just good content.

* indicates required

குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் மலேஷியா 2022

மக்கள் இன்றி மாற்றம் ஏற்படாது. உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தி உங்கள் எதிர்காலத்தை வடிவமையுங்கள்.

Photo by Thilipen Rave Kumar

நாங்கள் மலேஷிய மக்களை நம்புகிறோம்

பிரதான ஊடகங்கள் மலேஷியத் தேர்தல்களை மிகவும் அற்பமான முறையில் கவனிக்கின்றன. இந்த முறையினால் தங்கள் பிரச்சனைகள் குறித்து உண்மையான விவாதங்களை விரும்பும் மக்கள் வேற்று மக்கள் ஆகின்றனர். தேர்தல் செயல்முறையில் குடிமக்கள் செயலற்றப் பங்கேற்பாளர்களாக நடத்துகின்றனர். குடிமக்கள் அதை விடச் சிறந்த நடத்தைக்குத் தகுதிபெற்றவர்கள்.

குடிமக்களின் நிகழ்ச்சிநிரலில் பங்கேற்று மலேஷியாவிற்கு முக்கியமானது என நீங்கள் கருதும் பிரச்சனைகளைக் குறித்து கூறுங்கள்?

எங்கள் செயலெல்லைக்கு வழிக்காட்டுங்கள்

மலேஷியப் பொதுத் தேர்தல் வரவிருக்கும் இந்த நேரத்தில், உங்கள் பிரச்சனைகள் எங்களது செயலெல்லையை வழிகாட்ட உதவும். இந்தப் பிரச்சனைகளால் வடிவமைக்கப்பட்ட கட்டுரைகளை நியூ நரடிஃப் எங்கள் அனைத்து வடிவங்களிலும் வெளியிடும், இதனால் நீங்கள் தகவல் அறிந்து முடிவுகள் எடுக்கலாம். 

எங்கள் ஜனநாயக வகுப்பறைகளில் இணையுங்கள்

நீங்கள் இதற்கு முன்பு வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காத எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு இடம் தான் நியூ நரடிஃபின் ஜனநாயக வகுப்பறைகள். மலேஷியா சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் சார்ந்த விவாதங்களில் இணைந்து அரசியல்ரீதியாக ஈடுபாட்டுடன் இருங்கள்.

மிக முக்கியமான பிரச்சனைகளை வரிசைப்படுத்துங்கள்

கட்டம் 2 இல், எங்கள் கருத்துக்கணிப்பில் இருந்து அறியவரும் முக்கியமானப் பிரச்சனைகளைப் பகிர்ந்து, மலேஷியா நாடு சந்திக்கும் 5 மிக முக்கியமான பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தக் கேட்போம். உங்கள் வாக்கை அளித்து எதிர்காலத்தை வடிவமையுங்கள்!

ஈடுபாட்டுடன் இருங்கள்

எங்கள் பொதுக் கருத்துக்கணிப்பில் பதிலளிக்க உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழையுங்கள். எங்கள் வாராந்திர செய்தியறிக்கைக்குப் பதிவு செய்வதன் மூலம் வரவிருக்கும் ஜனநாயக வகுப்பறைகள் பற்றி அறிந்திருந்து அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகத் தேவையானத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாசிப்புப் பட்டியல்களைப் பெறுங்கள்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் உங்கள் வாக்குகளுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் எதைப் பற்றி பேச வேண்டும் என நினைக்கிறீர்கள்?

மலேஷியாவில் பிரதான ஊடகங்கள் பிரச்சனைகளைக் குறைத்துக் கூறுகின்றன என்று நியூ நரடிஃபின் மலேஷியா செயலெல்லை சுட்டிக்காட்டுகிறது. மலேஷிய மக்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:

“அயல்நாட்டில் இருக்கும் எனது சகஊழியர்களுக்கு [ஆண்], அவர்களது [குழந்தைகள்] மலேசியர்கள். அவர்கள் மீண்டும் வரத்தேவையில்லை, நான் தேர்ந்தெடுத்த தேர்வை அவர்கள் எடுக்கத் தேவையில்லை. இது நியாயமில்லை.”

“உலகளாவிய வெப்பநிலை அதிகரித்தலின் தாக்கத்தை மட்டுப்படுத்த நம்மிடம் மீதமுள்ள காடுகளை உடனடியாகப் பாதுகாக்கவேண்டியதன் தேவையை மக்களுக்கு வானிலை மாற்றக் கவலைகள் உணர்த்துகின்றன.”

அலிசியா டியோ

ஷா ஆலம் காடுகளைக் காப்பாற்றப் போராடும் ஷா ஆலம் சமுதாயக் காடுகள் சமூகம்

“எனது பிறப்புச் சான்றிதழல் ‘குடியுரிமை அல்லாதவர்’ என்று மாற்றப்பட்டபோது, சூழ்நிலையைப் புரிந்துக்கொள்ள முடியாத இளம் வயது எனக்கு. எனது IC கிடைக்கக் காத்திருக்கும் வரையிலானத் தற்காலிக சூழ்நிலை அது என்று நினைத்தேன்.”

வோங் கியூங் ஹுய்

தான் பிறந்த நாட்டில் குடியுரிமைக்காகப் போராடி வெற்றியும் பெற்றவர்!

குடிமக்கள் நிகழ்ச்சிநிரலின் ஒரு பகுதியாகுங்கள்

“உலகில் பல விஷயங்கள் தவறாக இருக்கின்றன, நான் என்ன செய்வது?” என்கிற பொதுவானக் கேள்விக்கான விடை தான் நியூ நரடிஃப். சிறந்த உலகத்தை உருவாக்குவது சாத்தியம் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால் பிரச்சனைகளை உங்கள்பார்வைக்குக் கொண்டு வரும் தகவலைத் தருவது மட்டுமல்லாது எங்களது சமூக ஈடுபாடு மற்றும் ஒருங்கிணைந்தத் தீர்வுகளைத் தேடி குடிமைப் பங்கேற்றல் மூலம் மக்களையும் ஒன்றும் சேர்க்கிறோம்.

குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் மூலம், சமுதாயமான நீங்கள் அக்கறை கொள்ளும் பிரச்சனைகள் மீது தேர்தல் கவனம் செலுத்த உதவுகிறோம். மலேஷியக் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் இவ்வாறு வேலை செய்யும்:

கட்டம் 1: கருத்துக்கணிப்பை எடுங்கள்

தொழில்முறை கருத்துக்கணிப்புத் தளத்தை உபயோகித்து மலேஷியாவில் 1,200 நபர்களிடம் கருத்துக்கணிப்பை நடத்துவோம். உங்கள் கருத்துப்படி, மலேஷியாவில் முக்கியமாகக் கருதும் பிரச்சனைகள் எவை? வரவிருக்கும் அடுத்தப் பொதுத் தேர்தல்களில் உங்கள் வாக்குகளுக்குப் போட்டியிடும் பொழுது வேட்பாளர்கள் பேச வேண்டியவை என நீங்கள் கருதுவது எதை? இந்தத் தளத்தை உபயோகிப்பதால் மலேஷியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் புள்ளியியல் சார்ந்த பிரதிபலிப்பு மாதிரிகளை நாம் பெறுவோம்.

அதே நேரம், நமது நியூ நரடிஃப் சமுதாயத்தில் இருந்தும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். அதே கேள்விகளை ஒரு பொதுக் கருத்துக்கணிப்பு மூலம் பதிலளிக்க உங்களை அழைப்போம்.

பின்னர் இரு குழுக்களின் (தொழில்முறை கருத்துக்கணிப்பு மாதிரி மற்றும் பொது சமுதாயம்) பதில்களைத் தனித்தனியாக ஆய்வு செய்து ஒரு பட்டியலைத் தயார் செய்வோம்.

கட்டம் 2: முக்கியப் பிரச்சனைகளை வரிசைப்படுத்துதல்

எங்கள் கருத்துக்கணிப்பில் இருந்து அறியவந்த முக்கிய பிரச்சனைகளைப் பகிர்ந்து, இரு குழுவில் இருபவர்களிடமும் மலேஷியாவில் அவர்கள் சந்திக்கும் 5 முக்கிய பிரச்சனைகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்வோம்.

கட்டம் 3: பிரச்சனைகளைப் புரிந்துக்கொள்ளுதல்

இரு கருத்துக்கணிப்பில் இருந்து நாங்கள் கண்டறிந்ததை வெளியிடுவோம். இந்தப் பிரச்சனைகளை மக்கள் நன்றாகக் புரிந்துகொள்வதற்கு கட்டுரைகள், பாட்கேஸ்ட்டுகள் மற்றும் விளக்கங்களை உருவாக்குவோம்.

கட்டம் 4: ஜனநாயக வகுப்பறையில் பங்குபெருங்கள் 

எங்கள் கண்டறிதல்கள் மற்றும் ஆதாரங்களை உபயோகித்து, அடுத்த தேர்தலுக்கு நமது சமுதாயத்தை அறிவுறுத்தி ஆற்றலூட்ட ஜனநாயக வகுப்பறைத் தொடர்களை உருவாக்குவோம்.

“வேட்பாளர்களுடனோ அல்லது கட்சித் தலைவர்களுடனோ நேரடியாகப் பேச ஒரு வாய்ப்பும் கிடைக்காதவர்கள் எப்படி அவர்களது குறைகளை நிகழ்ச்சிநிரலில் கொண்டுவருவார்கள்?” என்ற கேள்விக்குப் பதிலைத்தேடி 2019 இல் நியூ நரடிஃபின் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் வெளியிடப்பட்டது. சிங்கப்பூர் மக்களிடம் இருந்து 400 பதில்கள் வந்தன, அவற்றை சிங்கப்பூர் சந்திக்கும் 28 மிக முக்கிய சிக்கல்கள் எனத் தொகுத்தோம். சுமார் 800 பேர் முதல் 5 பிரச்சனைகளைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்தக் சிக்கல்கள் சார்ந்த கட்டுரைகளை எங்கள் அனைத்து ஊடகங்களிலும் கொண்டுவந்தோம். 2020 சிங்கப்பூர் பொதுத் தேர்தலுக்கு முன்பு, சிங்கப்பூர் குடிமக்களின் நிகழ்ச்சிநிரல் என்னும் ஒற்றைப் புத்தகத்தில் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டோம். இந்தப் பிரச்சனைகளைக் கவனிக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் வரவேற்று அவர்களது பதில்களைப் பட்டியலிட்டோம்.

இந்த வருடம், குடிமக்களின் நிகழ்ச்சிநிரலை மலேஷியாவையும் உள்ளடக்குமாறு விரிவாக்கியுள்ளோம். மலேஷியப் பிரச்சனைகள் குறித்து அதிகம் படிக்கப்பட எங்களது கட்டுரைகள் இதோ:

உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். எதிர்காலத்தை வடிவமையுங்கள்.

பார்க்க முடியவில்லையா கணக்கெடுப்பை?